தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

Thala Ajith With Fan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாக உள்ள வலிமை படத்திற்காக தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தின் அப்டேட்டிற்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக ரசிகர்கள் காத்து கிடந்த நிலையில் வரும் மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த நாள் விருந்தாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வபோது தல அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மிகவும் சாதாரண உடையில் ரசிகருடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.