Ajith Viral Video

Ajith Viral Video : தல அஜித்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலரையும் ரசிக்க வைத்து வருகிறது.

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து தல அஜித் தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

விஸ்வாசம் படப்பிடிப்புகளை முடித்த அஜித் சமீபத்தில் தான் தன்னுடைய மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் குட்டி தல ஆத்விக் ஆகியோருடன் கோவா டூர் சென்றுள்ளார்.

கோவா டூர் செல்லும் போது விமான நிலையத்தில் தல அஜித் தன்னுடைய மகளான அனோஷ்காவை பாதுகாப்பாக கையை பிடித்து கூட்டி செல்கிறார்.

இந்த வீடியோவை ரசிகை ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் அப்பானா இப்படி அஜித்தை போல இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.