Thala Ajith Latest Photos

5 ஆண்டுகளுக்கு பிறகு தல அஜித் தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார் தல அஜித்.

Thala Ajith Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தல அஜித் மொட்டை தலையுடன் இருக்கும் கெட்டப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு வேதாளம் படத்தில் மொட்டை தலையுடன் நடித்த அஜித் வலிமை படத்தில் சில காட்சிகளில் மொட்டை தலையுடன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை அப்டேட் எதுவும் வெளிவராத நிலையில் இணையத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.