Thala Ajith in Mohanlal Direction

மோகன் லால் இயக்கத்தில் தல அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thala Ajith in Mohanlal Direction : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியான படி உள்ளது.

இப்படியான நிலையில் தல அஜித் அடுத்ததாக மோகன் லால் இயக்கத்தில் உருவாக உள்ள மலையாள படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை படங்களில் நடிப்பதிலும் பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வந்த மோகன் லால் முதல் முறையாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் பல்வேறு மொழிகளை சேர்ந்த நடிகர்கள் நடிக்க உள்ளனர். அவர்களுடன் இணைந்து தல அஜித்தும் நடிக்க உள்ளார்.

மோகன் லால் கேட்டு கொண்டததால் அவருடனான நட்புக்காக அஜித் இப்படத்தில் நடிக்க உள்ளார். அவர் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா அல்லது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது மட்டும் அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.