Thala Ajith Photo : தல அஜித்தை பார்த்ததும் ரசிகர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனால் தல அஜித் அவரை சமாதானப்படுத்தும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவரை படங்களில் மட்டும் தான் பார்க்க முடியும். எப்போதாவது ஏர்போர்ட்டில் பார்க்கலாம்.
அப்படியிருந்தும் அஜித்திற்காக உயிரைஏ கொடுக்கும் அளவிற்கு விஸ்வாசமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உண்டு. பொது இடங்களில் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டாலும் மறுக்காமல் புகைப்படம் எடுத்து கொள்பவர்.
தற்போதும் அப்படி தான் ரசிகர் ஒருவர் அஜித்தை ஏர்போர்ட்டில் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
இதனை பார்த்த அஜித் அந்த ரசிகரை சமாதானப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வந்த விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததை அடுத்து அஜித் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அந்த விடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.