Thala 61 With H Vinodh

தல அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Thala 61 With H Vinodh : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

H வினோத் இயக்கத்திலும் போனி கபூர் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாக ஆன நிலையில் வலிமை பற்றிய அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

இதனால் தல ரசிகர்கள் இயக்குனர் வினோத் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இதுமட்டுமில்லாமல் வலிமை அப்டேட்டை திருச்செந்தூர் முருகனிடம் கேட்டு போஸ்டர் அடித்தும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள் தல ரசிகர்கள்.

இதனையடுத்து தல61 படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தல அஜித்தின் அடுத்த படத்திலும் போனி கபூர் மற்றும் எச் வினோத் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் தல 61 படத்திலும் இவர்களது கூட்டணி தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.