Thala 61 movie heroine update

தல 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

Thala 61 movie heroine update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படம் H வினோத் இயக்கத்திலும், போனி கபூர் தயாரிப்பிலும் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆகியும் வலிமை குறித்து அப்டேட் எதுவும் படக்குழு வெளியிடவில்லை.

இதனால் தல ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இது ஒருபுறமிருக்க தல அஜித்தின் அடுத்த படத்திற்கான தகவல் ஒன்று வெளியானது. இந்தப்படத்தில் மீண்டும் H வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தளபதி விஜய் உடன் மெர்சல் படத்தில் இணைந்து நடித்த நித்யா மேனன் தான் ஹீரோயினியாக நடிக்கப்போவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இது எந்த அளவுக்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.