Thala 61 Movie Director Update

தல 61 படத்தின் இயக்குனர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Thala 61 Movie Director Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

H வினோத் இயக்கத்திலும் போனி கபூர் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆகியும் அப்டேட் எதையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகின்றது படக்குழு.

இதனால் ரசிகர்கள் தமிழக முதல்வர் முதல் தமிழ் கடவுள் முருகன் வரை அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தல ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் செய்தியாக தல 61 படத்தை யார் இயக்குவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இயக்குனர் ஏ எல் விஜய் தான் தல 61 படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.