Thala 61 Director and Production Details
Thala 61 Director and Production Details

தல அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thala 61 Director and Production Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் பிரமாண்ட படத்தில் நடிக்க இருந்த அஜித், இறுதியில் ட்ராப் ஆன கதை – முதல் முறையாக வெளியான தகவல்.!

இந்த படத்தையடுத்து அஜித் யாருடன் இணைவார் என்பது குறித்த கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வந்த நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

கோகுலம் பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக என கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.