pooja4

அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அடுத்ததாக தல 60 திரைப்படம் உருவாக உள்ளது.போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் துவங்கியது.

pooja2

இப்படத்திற்கு வலிமை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ‘வலிமை’ என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ளது. இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

pooja

இந்நிலையில், பூஜையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.