Thala 59 Update

Thala 59 Update : தல அஜித்தின் 59-வது படத்தில் பிரபல நடிகர் ஒருவர் 15 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணைந்துள்ளார். இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது தீரன் பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வித்யா பாலன் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அஜித் தான் ஹாட், ஆனால் விஜய்? – தமன்னா ஓபன் டாக்.!

மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து பிரபல நடிகரான டெல்லி கணேஷும் தற்போது இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் நடிக்க உள்ள மூன்று பெண்களில் ஒருவருக்கு அப்பாவாக அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இவர் ஏற்கனவே ஹிந்தியில் உருவான பிங்க் படத்திலும் நடித்திருந்தார். இதற்கு முன்னதாக அஜித்துடன் ஜனா படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Delhi ganesh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.