Ajith 59

Thala 59 Update : இவ்வளவு வேகமாகவா என ரசிகர்களை ஷாக்காகியுள்ளது தல 59 அப்டேட். அப்படி என்ன ஆச்சுன்னு பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் விஸ்வாசம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் தல 59 படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த திரைப்படம் பாலிவுட்டில் அமிதாப் பச்சன் டாப்ஸி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது.

சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது வரை 30 % படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டதாம்.

இதனால் இப்படம் திட்டமிட்டபடி அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அஜித் ரசிகர்கள் இந்த அப்டேட்டால் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதே சமயம் நீங்க இவ்வளவு வேகமா? என வினோத்தையும் பாராட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.