Thala 59 Movie

Thala 59 Movie : தல 59 படம் குறித்து உலா வந்த அத்தனையும் தகவல்களும் உறுதியாகியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் தற்போது தொடர்ந்து நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை அடுத்து சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கி மெகா ஹிட் வெற்றி கண்ட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை ஸ்ரீ தேவியின் கணவரும் பாலிவுட் படத்தின் தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வைரலாகி இருந்தன.

தற்போது இவை அனைத்தும் உண்மையாகியுள்ளது. ஆம், சென்னை ரெசிடென்சி ஹோட்டலில் தல அஜித், போனி கபூர், வினோத் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

தல 59 படத்தை பற்றிய கதை விவாதத்திற்காக தான் இவர்கள் சந்தித்து இருந்ததாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்புறம் என்ன கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள் ரசிகர்களே..

Thala 59

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.