Thala 59 Release

Thala 59 Release : விஸ்வாசம் ரிலீஸ் தள்ளி போனது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் அதற்கான காரணம் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் தல 59 படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்சீ ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த நாளன்று இப்படம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போயுள்ளது.

அதற்கான காரணம் என்னவென்றால் பிங்க் படத்தின் ரீமேக் என்பதால் அஜித்திற்கு பெரிய அளவில் மாஸ் இருக்காது என்பதால் தமிழ் ரசிகர்களுக்கும் அஜித்திற்கு ஏற்றார் வகையில் கதையில் மேலும் சில மாற்றங்களை கொடுக்க உள்ளாராம் வினோத்.

அதற்காக அஜித் மேலும் 10 நாட்கள் கால்ஷீட் கொடுக்க உள்ளதாகவும் தகவல்ககள் கிடைத்துள்ளன. இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.