பாலியல் வன்கொடுமை விவகாரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இயக்குனர் ஒருவர் சர்ச்சையான பதிவை பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் ப்ரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பலரும் இந்த கொடூர செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வரும் இந்த வேளையில் தெலுங்கு இயக்குனர் டேனியல் வர்ஷன் என்பவர் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யும் ஆண்களிடம் காண்டம் கொடுத்து அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனால் பெண்கள் கொலை செய்யப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுவார். மேலும் போலீஸ், பெண் அமைப்புகள் பாலியல் வன்கொடுமைகளை சாதாரனது தான் என எடுத்து கொள்ள வேண்டும். இதனை பெரிதுபடுத்த கூடாது எனவும் பதிவிட்டுள்ளார்.

இவருடைய இந்த பதிவிற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். பிரபல பாடகியான சின்மயீயும் கண்டனங்களை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Diretor Danniel Sharvan Photos : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.