TN Theatres

மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன நிலையில் தமிழகத்தின் திரையரங்குகளை மூட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamilnadu Theatres Association Decison : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. ஏற்கனவே இதன் முதல் அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல் ஆகிறது. இரவு நேரங்களில் பொதுப்போக்குவரத்து, வணிக வளாகங்கள், திரை அரங்குகள் என எதற்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையான பாதிப்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை மூட திட்டமிட்டு இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலந்து பேசி ஆலோசனை செய்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனால் 50 சதவீத இருக்கைகள் இருந்தாலும் பரவாயில்லை என படத்தை ரிலீஸ் செய்ய தயாராக உள்ள சிறு தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.