Tamilnadu left the fort on a run
Tamilnadu left the fort on a run

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் நேற்று சையத் முஷ்டாக் அலி கோப்பை யின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

கர்நாடக அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் மனீஷ் பாண்டே சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 60 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், கர்நாடகா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது.

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது. முன்னணி ஆட்டக்காரர்கள் ஓரளவு ரன் எடுத்தனர்.

ஷாருக் கான் 16 ரன், ஹரி நிஷாந்த் 14 ரன், வாஷிங்டன் சுந்தர் 24 ரன், தினேஷ் கார்த்திக் 20 ரன் எடுத்து அவுட்டாகினர். தமிழக அணியில் பாபா அபராஜித் 40 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 43 ரன்னில் ரன் அவுட்டானார். கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன் தேவைப்பட தமிழக அணி ஒரு ரன் மட்டுமே எடுத்து.

விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழக அணி தோல்வி அடைந்து கர்நாடக அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.