Tamilnadu Govt Reply to MP Ravikumar

“சாதிவாரி நிலவரம் குறித்து புள்ளிவிவரங்களை சேகரிக்க தமிழக அரசு ஏன் ஆணையம் அமைக்க வேண்டும்? கூட்டணியில் இருக்கும் மத்திய பாஜக அரசிடம் இருந்து அந்த தரவுகளை கேட்டு பெறக்கூடாதா?” என விசிக எம்.பி ரவிகுமார் கேள்வி எழுப்பியதற்கு தமிழக முதல்வர் பதிலளித்துள்ளார்.

Tamilnadu Govt Reply to MP Ravikumar : தமிழகத்தில் நேற்று பாமகவினர் 20 சதவீத இட ஒதுக்கீடு தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழக முதல்வர் சாதிவாரியான கணக்கீடுகளை மேற்கொண்ட தனி ஆணையம் அமைக்க உத்தரவிட்டார்.

இதுகுறித்து விசிக எம்பி ரவிகுமார் அவர்கள் இதற்கு எதற்கு தனி ஆணையம் பிஜேபியிடம் கேட்கலாமே என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு தமிழக அரசு தரப்பு பதில் அளித்துள்ளது. அதாவது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் கண்காணிப்பு என்பது எடுக்கப்பட்டு, பொருளாதாரம், இடம், மதம் போன்ற விவரங்கள் (சாதிவாரி தகவல் தவிர்த்து) வெளியிடப்படும். காங்கிரஸ் ஆட்சியில் 2011 ஆம் ஆண்டு இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டது.

2011 ஆம் ஆண்டு முதல் இந்த 9 ஆண்டுகளில் சாதிவாரியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசிடம் இருந்து புள்ளிவிவரங்களை பெற்றால் என்ன பயன் என்பதை எம்.பி அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும், தமிழக வாரியாக நாம் புதிய புள்ளிவிவரங்களை எடுத்தால், பட்டியலினத்தவரின் ஜனத்தொகை இந்த 9 ஆண்டுகளில் பெருகியிருக்கும், அந்த விகிதத்தின் அடிப்படையிலேயே அவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும்,அது அவர்களுக்கு தான் பயன் என்பதையும் ரவிகுமார் அவர்கள் அறியவேண்டும்.

10 ஆண்டுகளில் எவ்வளவே மாற்றங்கள் வந்து இருக்கும், அதனால் முதல்வர் இந்த ஆணையத்தை அமைத்ததில் தவறு ஏதும் இல்லை, மேலும் மத்திய அரசின் அடுத்த புள்ளி விவரங்கள் 2023 ஆம் ஆண்டு தான் வெளியிடப்படும்.

இந்த ஆணையம் அமைத்ததன் மூலம், தமிழகம் சார்ந்த புள்ளிவிவரங்கள் விரைவாக எடுக்கப்பட்டு, சலுலைகளும் சரியாக கொண்டுபோய் சேர்க்கப்படும் என்பதை ரவிகுமார் உணரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.