Tamilnadu Government : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News | High Court | state election commission

Tamilnadu Government :

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி ஜுலை 2-மாதம் நிறைவு பெறும் என்று கூறிவந்த நிலையில், இடஒதுக்கீடு விவரங்களை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

3 ஆண்டு காலம் தமிழகத்தில் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதற்கான வேலைகள் நடந்துவருகின்றன.

சூர்யா, சன் பிக்சர்ஸ் கூட்டணியில் புதிய படம் – இயக்குனர் யார் தெரியுமா?

இதில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 200 வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் பொதுப்பிரிவிற்கு 79 வார்டுகளும், பொதுப்பிரிவு பெண்களுக்கு 82 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 வார்டுகளும், பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களுக்கு 16 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.