Tamilnadu Government Update

பணிக்காலத்தில் காலமான காவல் ஆளுநர்கள் மற்றும் குடிமை பணியாளர்கள் வாரிசுகள் 1562 பேருக்கு அரசாணையை வழங்கினார் எடப்பாடி பழனிச்சாமி.

Tamilnadu Government Update:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் பணிக்காலத்தில் காலமான காவல் துறை ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் ரிசுதாரர்கள் 1562 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளைவழங்கும் அடையாளமாக 10 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது தலைமைச் செயலாளர் திரு சண்முகம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு எஸ் கே பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குனர் திரு ஜே கே திரிபாதி காவல் துறை கூடுதல் இயக்குனர் திரு தாமரைக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதுமட்டுமல்லாமல்முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் தொழில்துறையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு பி தங்கமணி, வீடியோ தொழில் துறை அமைச்சர் திரு ஆர் பி உதயகுமார், ஊரக தொழில் துறை அமைச்சர் திரு பா பெஞ்சமின், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஏழை காவல் பணியில் வீரமரணம் அடைந்த காவல் ஆளிநர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் நாள் அனுசரிக்கப்படும் காவலர் வீரவணக்க நாள் அல்லது இவ்வாண்டு முதல் காவலர் கொடி நாளாக நாடு எங்கும் அனுசரிக்கப்பட உள்ளது.

அதன் தொடக்கமாக காவலர் கொடிநாள் கொடியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு கே பழனிச்சாமி அவர்களுக்கு இன்று தலைமைச் செயலகத்தில் காவல்துறை தலைமை இயக்குனர் திரு ஜே கே திரிபாதி அவர்கள் அணிவித்தார்.

இந்த நிகழ்வின்போது தலைமைச் செயலாளர் திரு சண்முகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு எஸ் கே பிரபாகர் காவல் துறை கூடுதல் இயக்குனர் திரு தாமரைக்கண்ணன் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.