Tamilnadu Government Order on Medical Sheet Allocation

மருத்துவ படிப்பில் சேர தமிழக மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Tamilnadu Government Order on Medical Sheet Allocation : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது.

கல்வி, விவசாயம், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் அதீத கவனத்தை செலுத்தி அதன் வளர்ச்சியை உயர்த்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் பட்டப்படிப்பை பயில 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை உதவ வேண்டும் என மத்திய அரசிற்கு வேண்டுகோள் வைத்திருந்தது. இதற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவளித்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சமீபத்தில் ஆளுநர் பன்வாரிலால் அவர்களை சந்தித்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில் தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் பட்டப்படிப்பை பயில 7.5 % இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.