New Restrictions in Tamilnadu

தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tamilnadu Government New Restriction in Lockdown : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று இந்தியாவில் மீண்டும் அதிதீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

தமிழகத்திலும் நாளுக்குநாள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் தேர்தல் முடிந்ததும் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படும் என கூறப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதாவது

  1. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி.
  2. மால்கள், கேளிக்கை விடுதிகள் வீட்டு அறைகளில் 50 சதவீத பேருக்கு மட்டுமே அனுமதி.
  3. பேருந்துகளில் நின்று செல்வதற்கு அனுமதியில்லை.
  1. வெளி மாநிலங்கள் வெளி நாடுகளில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்.
  2. கோயம்பேடு மார்க்கெட்டில் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை சில்லரை விற்பனைக்கு அனுமதி இல்லை.
  3. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி. இறுதிச் சடங்குகளில் ஐம்பது பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி.
  4. நோய் கட்டுபட்டு பகுதிகளில் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
  5. வாடகை வாகனங்கள், டாக்ஸி உள்ளிட்டவற்றில் டிரைவர் உட்பட 3 பேருக்கு மட்டுமே அனுமதி.
  6. வயது பத்து பூங்காக்கள், அருங்காட்சியங்கள் இவற்றில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி.
  7. கோவில்களில் மக்கள் இரவு 8 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி.
  8. மதக் கூட்டங்கள், திருவிழாக்களுக்கு அனுமதி ரத்து. இந்த உத்தரவுகள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.