TamilNadu Government Move on Medical Seat Issue
TamilNadu Government Move on Medical Seat Issue

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து தமிழக அரசு அடுத்த அதிரடியான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

TamilNadu Government Move on Medical Seat Issue : மருத்துவ படிப்பு பயில நீட் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வை இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தி வருகிறது.

மருத்துவ படிப்பு பயில தமிழக மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது. இதனை அமல்படுத்துமாறு நீதிமன்றமும் மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கியது.

ஆனால் மத்திய அரசு இந்த வருடத்தில் எந்த வித இட ஒதுக்கீட்டையும் அமுல்படுத்த முடியாது என நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தது. இதனால் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இந்த நிலையில் தமிழகத்தின் ஐந்து அமைச்சர்கள் தமிழக ஆளுநரை சந்தித்து இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த கோரி கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக அரசின் இந்த அதிரடியான நடவடிக்கை மருத்துவப் படிப்பை பயிலும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழக அரசின் இந்த செயல் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.