Tamilnadu Government Launched New Plans
Tamilnadu Government Launched New Plans

19.9. 2020-ல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

Tamilnadu Government Launched New Plans : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களை 19.9.2020 அன்று தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணி அவர்கள் சந்தித்து, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு, Dial for Water 2.0 என்ற திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்கோச் தங்க விருது மற்றும் கல்குவாரிகளை சேமிப்பு நீர்த்தேக்கங்களாக மாற்றிய திட்டத்திற்காக வழங்கப்பட்ட தேசிய நீர் புதுமை விருது (National Water Innovation Award 2020) ஆகிய விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

ஸ்கோச் நிறுவனத்தால் கடந்த 30.7.2020 அன்று அரசு மூலம் பொதுமக்களுக்கு சேவை வழங்கல் பிரிவின் கீழ் Dial For Water 2.0 என்ற திட்டத்திற்காக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு ஸ்கோச் தங்க விருது வழங்கப்பட்டது.

Elets Technomedia Pvt. Ltd., என்ற நிறுவனம் இந்திய அரசின் நீர்வள அமைச்சகத்துடன் இணைந்து 28.8.2020 அன்று நடத்திய தேசிய நீர் புதுமை உச்சி மாநாடு 2020-ல் (Elets National Water Innovation Summit 2020) மழைநீர் சேகரிப்பில் புதுமை என்ற பிரிவின் கீழ் கல்குவாரிகளை சேமிப்பு நீர்த்தேக்கங்களாக மாற்றிய திட்டத்திற்காக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு தேசிய நீர் புதுமை விருது வழங்கப்பட்டது.

இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை நேரில் பாராட்டிய தமிழக முதல்வர்!(Opens in a new browser tab)

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், இ.ஆ.ப., சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.டி.என். ஹரிஹரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு நீர்வள முதலீட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள் கூட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து கோவிட் நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை நிறுவனத்துக்கு 93 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார்.

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் 19.9.2020 அன்று தலைமைச் செயலகத்தில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் சென்னை, கெல்லீஸில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தங்கும் அறைகள், தொழிற்பயிற்சி கூடம், பணியாளர் அறை, சமையலறையுடன் கூடிய உணவருந்தும் கூடம் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சிறுமியர்களுக்கான அரசினர் கூர்நோக்கு இல்லக் கட்டடத்தை திறந்து வைத்தார்கள்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் 2 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட https://www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்தை துவக்கி வைத்தார்கள். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன், தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவில் உயர்தர திறன் மேம்பாட்டு மையம் நிறுவிடவும், கோர்ஸெரா நிறுவனம், தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளித்திடவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அரசுத் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளை பாராட்டிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு. பழனிசாமி அவர்களிடம் 19.9.2020 அன்று தலைமைச் செயலகத்தில், ஊராட்சி நிர்வாகத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை (Information and Communication Technology Tools) திறம்பட செயல்படுத்தியமைக்காக தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டு, மத்திய ஊராட்சி அமைச்சகத்தால் தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்பட்ட 2018-19ஆம் ஆண்டிற்கான மின் ஆளுமை விருது (e-Panchayat Puraskar) மற்றும் பாராட்டுச் சான்றிதழை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி. வேலுமணி அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இதனையடுத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் 19.9.2020 அன்று தலைமைச் செயலகத்தில், மீன்வளத்துறையின் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் வட்டம், குந்துகால் கிராமத்தில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.

மேலும், மீன்வளத் துறை சார்பில் 27 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களையும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் 5 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களையும் திறந்து வைத்தார்கள்.