Tamilnadu Governement Order on 7 Inner Caste

தமிழகத்தை சேர்ந்த 7 உட்பிரிவு ஜாதிகளை ஒரே பொதுப்பெயரில் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Tamilnadu Governement Order on 7 Inner Caste : தமிழக முதல்வர் தமிழக மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக பல அந்நிய முதலீடுகளை ஈர்க்க பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள் உருவாக்க வழி செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது 7 உட்பிரிவு சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என பொது பெயரில் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும், சலுகைகளை பெற பட்டியலின பட்டியலில் தொடர்ந்து இருப்பார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பட்டியல் சாதிகள் பிரிவில் உள்ள பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையன், வாதிரியான், தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட உட்பிரிவு சாதிகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க வேண்டும், இந்த சாதிகளை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றி பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று இந்த சமூகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக கடந்த ஆண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த குழு, அரசியல் கட்சியினர், அச்சமூகம் சார்ந்த இயக்கங்கள், மக்களிடையே மனுக்களை பெற்று ஆய்வு செய்து தமிழக அரசிடம் பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

குழு பரிந்துரை அடிப்படையில் மாநில பட்டியலினத்தில் உள்ள பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையன், வாதிரியான், தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட உட்பிரிவு சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். எனினும்,பொது பெயரில் மேற்குறிப்பிட்ட சாதிகள் அழைக்கப்பட்டாலும் சமூக நிலைகளை கருத்தில் கொண்டு பட்டியலின வகுப்பிலேயே அவைகள் தொடரும் என்றும் பட்டியலின வகுப்பின்படி இவர்கள் பெற்றுவந்த சலுகைகள் தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

ஒரே பெயரில் அழைக்கப்பட்டாலும், பட்டியலினத்தவருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு, அந்த சமூக மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செல்லும் அதே பாதையில் சென்று, எல்லோருக்கும் வளர்ச்சி, யாருக்கும் பாதகம் இல்லை என்பது போல முதல்வரின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பில் இருந்து முதல்வருக்கு பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.