balachandar

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

வங்ககடலின் தென்மேற்கு பகுதியில் குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அந்த தாழ்வு நிலை நாளை (அக்டோபர் 22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற இருக்கிறது. எனவே, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என அவர் தெரிவித்தார். மேலும், தென்மேற்கு வங்க‌க்கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், இன்றும், நாளையும் ராமநாதபுரம், சென்னை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனழை பெய்யும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.