Tamilnadu CM EPS Interview

மக்களின் பேராதரவுடன் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று அரியணையில் அமரும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tamilnadu CM EPS Interview : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறது. இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி வழங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வாகி உள்ளது.

அந்த அளவிற்கு மக்களின் நலன் கருத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி.

மேலும் 2021 மே மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால்முதல்வர் பழனிசாமி அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து அதிமுகவின சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அதிமுக மக்களின் பேராதரவுடன் மீண்டும் வெற்றி பெற்று அரியணையில் அமரும் என தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணியே தொடரும். எந்த எந்த கட்சிக்கு எவ்வளவு சீட்டு என்பது தேர்தல் நெருங்கும் நேரத்தில் முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை பாஜக தான் தீர்மானிக்கும் என சிலர் கூறிவந்தது குறித்து கேட்டதற்கு தமிழகத்தில் பெரும்பான்மை கட்சி அதிமுக தான். எனவே முதல்வர் வேட்பாளர் அதிமுக தேர்ந்தெடுக்கும் நபராகத்தான் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆல் உருவாக்கப்பட்டு அம்மாவால் கட்டமைக்கப்பட்ட அதிமுக அவர்களின் வழியில் செயல்பட்டு மக்களுக்கு தொடர்ந்து சிறப்பான ஆட்சியை வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.

மருத்துவ பட்டப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, அத்திக்கடவு அவினாசி திட்டம், குடிமராமத்து பணி, பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் என அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.