Tamilnadu Champion
Tamilnadu Champion

Tamilnadu Champion – தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் தமிழக அணி 20 ஆண்டுகள் கழித்து சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளது.

இறுதிச் சுற்று ஆட்டத்தில் மத்திய தலைமையில் செயலக அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

நேற்று மாலைமேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதலே தமிழகம், மத்திய தலைமை செயலக அணிகள் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முனைந்தன.

12-வது நிமிடத்தில் தமிழக வீரர் முத்துச்செல்வன் பெனால்டி கார்னர் மூலம் முதல் கோலை அடித்தார்.

20-வது நிமிடத்தில் மத்திய தலைமைச் செயலக வீரர் கோவிந்த் சிங் பதில் கோலடித்தார்.

தொடர்ந்து தமிழக வீரர் ராயர், மத்திய தலைமைச் செயலக அணி சார்பில் கோவிந்த் சிங் ஆகியோர் கோலடித்ததால் 2-2 என சம நிலை ஏற்பட்டது.

இரண்டாம் பாதியில் தொடங்கி சிறிது நேரத்தில் தமிழகத்தின் தாமு பீல்டு கோலடிதார். 56-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் தமிழக வீரர் வினோதன் கோலடித்தார்.

இறுதி 3-வது நிமிடம் இருந்த போது மத்திய செயலக அணி வீரர் கோலடித்தார். இறுதியில் 4-3 என தமிழக அணி வெற்றி பெற்றது. 20 ஆண்டுகள் கழித்து தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்று உள்ளது.

இதனை தொடர்ந்து, தமிழக அணிக்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை செயலாளர் தீரஜ்குமார் பரிசளித்தார். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் பெர்ணான்டோ தலைமை தாங்கினார்.