Tamil Rockers

Tamil Rockers : சர்கார் படம் கம்மிங் சூன் என தமிழ் ராக்கர்ஸ் ட்வீட் செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் மிக பெரிய எதிரி என்றால் அது தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரஸி இணையதளங்கள் தான்.

வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை திருடி இணையத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக விஷாலும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனாலும் இந்த தமிழ் ராக்கர்ஸை முற்றிலுமாக அழிக்க முடியாமல் திரையுலகமே திணறி வருகிறது.

இந்நிலையில் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் என பலர் நடித்துள்ள சர்கார் படத்தின் எச்.டி.பிரிண்ட் விரைவில் வெளியாகும் என ட்வீட் தமிழ் ராக்கர்ஸ் ட்வீட் செய்துள்ளது.

இது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி ரசிகர்கள் பலரும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி வருகின்றனர்.

தளபதி விஜயின் சர்கார் படம் வரும் நவம்பர் 6-ம் தேதி திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Sarkar Tamil Rockers

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.