Tamil Nadu Government Jobs | government announced that it was not eligible for government jobs for 33 graduates. | Tamil nadu | Chennai

Tamil Nadu Government Jobs :

சென்னை: தமிழகத்தில் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50-க்கும் மேற்பட்ட பட்ட படிப்புகள் அரசு வேலை பெற தகுதியற்றது என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க நோ சொன்ன பிரபல நடிகர் – யார் தெரியுமா?

தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அரசாணையில், “பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பிசிஏ பட்டம், பிஎஸ்சி கணிதத்திற்கு சமமல்ல என்றும்,

பாரதிய பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவை வழங்கும் எம்எஸ்சி நுண்ணுயிரியல் பட்டம் பணிக்கு ஏற்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதோடு மட்டுமின்றி, காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் எம்எஸ்சி, நுண்ணுயிரியல் முதுகலைப்படிப்புகள் , எம்எஸ்சி விலங்கியல் முதுகலைப்படிப்புக்கு நிகரானவை அல்ல(!?) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,.

மேலும் அரசு வேலை வாய்ப்புக்கு தகுதியாக கருதப்படும் பட்டபடிப்புகள் நிகராக 50 க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை அரசு வேலை வாய்ப்புக்கு தகுதியான படிப்புகளாக கருத முடியாது..! என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்பிற்கு தகுதியற்றவை என அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்கண்ட மற்றும் 50- க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை அரசு வேலை வாய்ப்புக்கு தகுதியான படிப்புகளாக கருத முடியாது என்று அரசு அறிவித்துள்ளது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.