YouTube video

Tamil Nadu Government Actions in Lockdowns : தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 49.8% ஆக இருந்தது. தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் இது ஜூலை மாதத்தில் 8.1% ஆக குறைந்தது. தற்போது அது 2.6% ஆக குறைந்துள்ளது.

ஊரடங்கு காலத்திலும் கூட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஊரடங்கு நாட்களில், விவசாயிகள் பாதிக்காத வகையில், அறுவடைப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் வருவாய் துறையிடம் அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ளலாம் என கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். இதனால் விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடர்ந்து எந்த தங்கு தடையும் இன்றி நடைபெற்றது.

தமிழகத்தில் சுமார் 70% பேர் விவசாயம், சார்ந்த தொழில்களைச் சார்ந்துள்ள நிலையில், கிராமப்புற வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.

மாஸ்டர் படத்துல அதுக்கு பஞ்சமே இல்ல.. சண்டை காட்சிகள் குறித்த அப்டேட்டை வெளியிட்ட முக்கிய பிரபலம்.!(Opens in a new browser tab)

கொரோனா காலகட்டத்தைச் சமாளிக்க 1,769 மருத்துவர்கள் உட்பட 10,661 மருத்துவப் பணியாளர்களை நியமித்துள்ளார்.

வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் கூட அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக 30,664 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளைத் தமிழகத்திற்கு முதல்வர் கிடைக்கப்பெற்றுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 67,812 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.

தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்தின. மின்னணு நிறுவனங்களும் வளர்ச்சியைச் சந்திக்க ஆரம்பித்துள்ளன. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் குறைவான மக்களே வேலையில்லாமல் இருந்துள்ளனர்.

கொரோனா கோரத்தாண்டவம் ஆடிய பேரிடர் காலத்தில் கூட, தமிழக முதல்வர், தனது தொலைநோக்கு பார்வையினாலும், சாதுர்யமான திட்டங்களாலும் வேலைவாய்பின்மை விகிதத்தை, 2.6 விகிதமாகக் குறைத்துள்ளார்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.