Tamil Nadu Back to Normal

தமிழக அரசு மேற்கொண்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தளர்வுகள் காரணமாக தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

Tamil Nadu Back to Normal : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து இது இந்தியாவும் தப்பவில்லை.

மேலும் தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்கரை லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழக அரசு அளித்து வரும் தரமான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனாவில் இருந்து இதுவரை 4,23,231 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது 49,203 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து உச்சத்தில் இருந்த கொரானா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 53 நாட்களுக்கு பிறகு 50 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள்.. சரசரவென குறைந்த வேலை வாய்ப்பின்மை!

தமிழகத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று.

மேலும் தமிழக அரசு அம்மா ‘கோவிட்-19’ வீட்டு பராமரிப்பு திட்டத்தில் முதல் நிலை நோயாளிகள் வீட்டிலிருந்து சிகிச்சை பெறும் வசதி, நடமாடும் கொரோனா பரிசோதனை மையம், வீடுகளில் சென்று நேரடியாக உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்தல், கொரோனா சிறப்புச் சிகிச்சை மையம் என தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கை மூலம் கொரோனா பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக சென்னையில் தொடர்ந்து 7 நாட்களாக, கொரோனா பாதிப்பு 1000-க்கும் கீழாக குறைந்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் 10 வது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு பதிவாகி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் வெகு விரைவில் தமிழகம் கொரானா இல்லாத மாநிலமாக மாறும் என எதிர்பார்க்கலாம்.