Tamil Movies Upcoming Release in OTT

OTT தளத்தில் 18 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil Movies Upcoming Release in OTT : சீனாவின் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்த நிலையில் தற்போது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன.

இதன் காரணமாக சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன், அந்தகாரம் போன்ற படங்களுடன் பல படங்கள் OTT-ல் ரிலீஸ் ஆகின. தற்போது திரையரங்குகளில் திறக்கப்பட்டுள்ள நிலையில் பல சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் OTT ரிலீஸையே நாடுவதாக கூறப்படுகிறது.

அதாவது தமிழில் சர்வர் சுந்தரம், திகில், பாரிஸ் பாரிஸ், கர்ஜனை, ஜிந்தா, ஆட்கள்தேவை, மாமாகிகி, ஹவாலா, தௌலத், மதம் என கிட்டத்தட்ட 18 படங்களை OTT வழியாக வெளியிடும் முயற்சியில் அப்பட தயாரிப்பாளர்கள் இறங்கி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.