Tamil Movies Shooting Cancelled

கொரானா வைரஸ் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் சூர்யா40, விக்ரம் 60, உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி ஒன்றை எடுத்துள்ளனர்.

Tamil Movies Shooting Cancelled : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவத் தொடங்கி அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது.

தமிழகத்திலும் நாளொன்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால் நடிகர் நடிகைகளின் பாதுகாப்பு நலன் கருதி சூர்யா 40, விக்ரம் 60, கார்த்திகேயனின் போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் சூர்யா, சிவகார்த்திகேயன், விக்ரம் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ‌‌