Tamil Cinema Actor and Actress Real Name

YouTube video

Nayanthara in Annathae Shooting Spot : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்க உள்ளது.

இதற்காக படக்குழுவினர் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டிக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.