Tamil Bigg Boss Celebrities Father Death

தமிழ் பிக் பாஸ் பிரபலங்களின் அப்பாக்கள் தொடர்ந்து இறந்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Bigg Boss Celebrities Father Death : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சி இடம் சீசனில் டைட்டில் வின்னராக வென்றவர் ஆரவ். இவருடைய தந்தை சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனல் டைட்டில் வின்னர் ஆக வென்றவர் முகேன் ராவ். இவருடைய தந்தையின் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

அதேபோல் இதே சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் லாஸ்லியா. இவருடைய தந்தையும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவர்களின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக பங்கேற்ற அனிதா சம்பத்தின் தந்தை கடந்த மாதம் உயிரிழந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பாலாஜி முருகதாஸின் தந்தையும் உயிரிழந்திருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது என்ன தமிழ் பிக் பாஸ் பிரபலங்களுக்கு வந்த சோதனை என ரசிகர்கள் பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர்.