Tamil Actor Florent Passes Away
Tamil Actor Florent Passes Away

மேலும் ஒரு தமிழ் நடிகர் மரணமடைந்திருப்பது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tamil Actor Florent Passes Away : கொரோனா வைரஸ் பரவல், திடீர் உடல்நலக் குறைபாடு காரணமாக இந்த 2020ல் தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் மரணமடைந்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் கலக்கப்போவது யாரு புகழ் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகில பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அவருடைய மறைவைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகரான ஃப்ளோரன்ட் என்பவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அடுத்ததாக கயல், தர்மபுரி, தரமணி, ராஜா மந்திரி, கொடிவீரன், விஐபி-2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஏற்பட்டுவரும் பிரபலங்களின் மரணங்கள் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.