T20 India Team
T20 India Team

T20 India Team – ஆஸ், எதிரான ஒருநாள் தொடர் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு மற்றும் டி20 போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ், உடனான டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு, ஜனவரி 12-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியும் ஜனவரி 23-ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்த போட்டியில் பங்கு பெரும் இந்திய அணியும் அறிவிக்கப்படட்டுள்ளது.

இந்த போட்டி தொடர்களில் சிறப்பான விஷயம் என்ன என்றால், தல தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். அதோடு தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடித்துள்ளார்.

ஆஸ், மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி : விராட் கோலி, ரோகித் சர்மா, ராகுல், தவான், ராயுடு, தினேஷ் கார்திக், கெதர் ஜாதவ், தோனி, பாண்டியா, யாதவ், சாஹல், ஜடேஜா, புவனேஸ்வர், பும்ரா, கலீல் அஹமது, ஷமி.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி (டி20) ; விராட் கோலி, ரோகித் சர்மா, ராகுல், தவான், ரிஷப் பந்த், தினேஷ் கார்திக், கெதர் ஜாதவ், தோனி, பாண்டியா, கிருணால் பாண்டியா, யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், பூம்ரா, கலீல்.