Suseenthiran Mother Passes Away

ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரனின் தாயார் மரணம் அடைந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Suseenthiran Mother Passes Away : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுசீந்திரன். இவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் திரைப்படம் நேற்று வெளியானது.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சுசீந்திரனின் தாயார் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது உடல் இன்று மாலை சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.