Suseenthiran Like to Direct Vijay
Suseenthiran Like to Direct Vijay

சிவகார்த்திகேயன் பட ஸ்டைலில் விஜய்யை இயக்க ஆசைப்படுவதாக பிரபல இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.

Suseenthiran Like to Direct Vijay : தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். அதன் பிறகு சில வெற்றி படங்களை கொடுத்த இவர் சமீபகாலமாக நல்ல ஒரு வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

அஜித்தின் தீவிர ரசிகரான இவர் பலமுறை அஜித்தை அரசியலுக்கு அழைத்து பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

ஸ்பைடர், சர்க்கார், தர்பார் என தொடர் சறுக்கல்.. அட்லியின் சம்பளத்தை விட கம்மியான முருகதாஸ் சம்பளம் – இப்ப எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நம்ம வீட்டு பிள்ளை படத்தைப் போல விஜயை வைத்து ஒரு கிராமத்து கதையில் படம் ஒன்றை இயக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் விஜய் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அனைத்து தரப்பினருக்கும் பிடித்த நடிகர். நல்ல நடிகரை வைத்து படம் பண்ண வேண்டும் என்றால் விஜயை வைத்து பண்ணலாம் என கூறியுள்ளார்.