Suriya's Veyyon Silli Song Record

சூரரைப் போற்று படத்தில் பாடல் புதிய சாதனை படைத்துள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

Suriya‘s Veyyon Silli Song Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் சூர்யா.

கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளிப் போயுள்ளது.

இரண்டு வருடத்திற்கு பிறகு டுவிட்டருக்கு வந்த வெற்றிமாறன் – அதிரடி கிளப்பிய பதிவு – சாத்தான்குளம் கொலை பற்றி என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து வெய்யோன் சில்லி என்ற மெலடி பாடலும் மண்ணுருண்ட என்ற ராப் பாடலும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தன‌.

வெய்யோன் சில்லி என்ற மெலடி பாடல் தற்போது யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்த குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோனி மியூசிக் நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டு உள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த சாதனை பற்றி கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.