Suriya40

சூர்யா 40 படம் பற்றி செம மாஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Suriya40 Movie Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் அடுத்ததாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் உருவாக உள்ள வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் சூரிய அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருக்கு
ஒரு
தரமான
சம்பவம்

Again @sunpictures & @Suriya_offl sir .Sema Happy 😍

#Suriya40bySunPictures
#Suriya40
#Pandiraj10 என பதிவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பால் நடிகர் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.