Suriya 40 With Vetrimaran
சூர்யாவின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான NGK, காப்பான் ஆகிய படங்களை தொடர்ந்து பொங்கலுக்கு சூரரை போற்று திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

அதுமட்டுமில்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஓகே சொல்லி இருப்பதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.

ஆம், அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணுவே வெற்றிமாறனின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளாராம். ஆனால் அதில் பெரிய நடிகர்கள் யாராவது இருக்க வேண்டும் என கூற வெற்றிமாறன் சூர்யாவை நாடியாக கூறப்படுகிறது.

சூரியாவும் கதை கேட்டு ஓகே சொல்லி விட்டதாகவும் இன்னும் தேதி மட்டும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக வெற்றிமாறன் வடசென்னை 2 மற்றும் சூரி நடிக்கும் படத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா, வெற்றிமாறன் கூட்டணி நிச்சயம் ஒரு வெறித்தனமான கூட்டணியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் சூர்யாவுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.