Suriya Tested Positive COVID19

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Suriya Tested Positive COVID19 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரை போற்று திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது.

கௌதம் மேனன் இயக்கத்தில் ஆந்தாலஜி வெப் சீரிஸ் தொடரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நான் நலமுடன் இருக்கிறேன் என்றும் விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.