மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். ஆனால் ஹீரோவாக இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு திரையுலகில் முக்கிய இடம் கிடைக்க பாலா, ஹரி, கெளதம் மேனன் என குறிப்பிட்ட சில இயக்குனர்களின் படங்களை காரணம் என சொல்லலாம்.
தற்போது சூர்யா மீண்டும் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம், ஆனால் ஹீரோவாக இல்லை கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.
ஆம், இயக்குனர் பாலா ஆர்யா மற்றும் அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார், அந்த படத்தில் தான் சூர்யா கெஸ்ட் ரோலில் வர உள்ளாராம்.
ஏற்கனவே பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்திலும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.