Suriya Movie :
Suriya Movie :

Suriya Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன.

இதில் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள என்.ஜி.கே படம், மே இறுதியிலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காப்பான் படம்,

ஆகஸ்ட் இறுதியிலும், சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்துவரும் சூரரைப் போற்று படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

இதுபோக அடுத்ததாக சிவா இயக்கத்திலும் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இது சூர்யா நடிக்கும் 39-வது படமாகும்.

இப்படி சூர்யா நடிக்கும் படங்களின் லிஸ்ட் நீண்டுக்கொண்டே போக தற்போது இயக்குனர் பாண்டிராஜூம் சூர்யாவுக்காக ஒரு கதையை தயார் செய்து வருகிறாராம்.

பாண்டிராஜிடம் டிவிட்டரில் ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது சூர்யாவை வைத்து படம் எடுப்பீர்கள் என கேட்டதற்கு, பக்கா கிராமத்து ஆக்ஷன் மற்றும் பேமிலி சென்டிமென்ட் கதை ஒன்று தயாராகி வருவதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே சூர்யா தயாரிப்பில் கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கியுள்ள பாண்டிராஜ், விரைவில் அவரை இயக்கவும் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.