Suriya in Next Movie Update

சூர்யாவின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Suriya in Next Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் இணைந்து வாடிவாசல் திரைப்படம் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் இரும்பு கை மாயாவி என்ற திரைப்படம் உருவாக இருந்தது. இது அந்த திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.