Suriya in Navarasa Movie Gettup

கௌதம் மேனன் படத்திற்காக நடிகர் சூர்யா புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suriya in Navarasa Movie Gettup : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அமேசான் பிரைம் வீடியோவில் நவம்பர் 11ஆம் தேதி வெளியான சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மணிரத்னம் கௌதம் மேனன் உட்பட பல இயக்குநர்கள் இணைந்து இயக்கவுள்ள நவரசா என்றார் வெப்சீரிஸ் தொடரில் நடிக்க உள்ளார்.

இந்த தொடரில் சூர்யா நடிக்க உள்ள காட்சிகளை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதற்காக புதிய கெட்டப்பில் இருக்கும் சூர்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.