சூர்யாவின் அயன் 2 பாகம்…செம மாஸ் தகவல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Suriya in Ayan 2 Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகனாக சினிமாவில் அறிமுகமானாலும் தன்னுடைய ஈடுபாட்டினால் உச்சம் தொட்டவர்.

அஜித், விஜய் ஆகியோர் டவுனில் இருந்த காலத்தில் சூர்யா தான் டாப் நடிகராக இருந்தார். தற்போது தான் சரியான கதைகள் அமையாமல் வெற்றிக்காக போராடி வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள சூரரைப்போற்று என்ற திரைப்படம் விட்ட இடத்தை எல்லாம் நிச்சயம் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

பிறந்ததும் முதல் முறையாக தன் மகளை கையில் தூக்கிய தருணம் – அழகிய புகைப்படத்தை வெளியிட்ட ராஜா ராணி சஞ்சீவ்!

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவ்விரு படங்களைத் தொடர்ந்து சூர்யா மீண்டும் நான்காவது முறையாக கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதுவும் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இணைந்துள்ளார்கள் எனக் கூறப்படும் தகவல் சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் உச்சகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

குளித்து முடித்த கையோடு விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்ட ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் – வைரலாகும் புகைப்படங்கள்!

ஹரி இயக்கத்தில் உருவாக உள்ள அருவா திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக கொரானா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.