Suriya in New Gettup

பரட்டை தலையுடன் வழக்கறிஞர் உடையில் நடிகர் சூர்யா புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

Suriya Getup for New Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவர் கொடிகட்டிப் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நீண்ட நேரம் வரும் கெஸ்ட் ரோலில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்து இருந்தது.

அந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுவரை இந்த படம் பற்றி எந்தவித செய்திகளும் தகவல்களும் வெளியாகாமல் இருந்தது. ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் இது பற்றிய தகவல்களை படக்குழு வெளியிடவில்லை.

இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா வழக்கறிஞர் உடையில் பரட்டை தலையுடன் போராட்டத்தில் ஈடுபடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தாலும் படத்தில் இந்த புகைப்படம் எப்படி கசிந்தது என்ற அதிர்ச்சியில் உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.